11-12 வகுப்பு கல்வி


எந்த கல்வி தரம் எடுத்து படிகின்றீர்கள் என்பது மிக முக்கியம். மத்திய கல்வி வாரியம் தரத்தின் (CBSE) கீழ் மாநில கல்லூரிகளில் சிறிது பங்கே உள்ளன. மாநில கல்வி வாரிய தரத்தின் கீழ் இடங்கள் நிறைய பங்கு உள்ளது. தமிழ்நாடு மாநில கல்லூரிகளில் படிக்க வேண்டுமெனின் தமிழ்நாடு மாநில கல்வி தரத்தை (State Board) தேர்ந்தெடுக்கவும்.

மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு எடுக்கும் மதிபெண்கள் மட்டும் தான் உங்கள் கல்லூரி நுழைவுக்கு பயன்படும்.

மேலும் நீங்கள் தேர்வு இரண்டாம் ஆண்டு எழுவதற்கு முன் நிறைய தேசிய கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். காலம் கடந்து விட்டால் பிறகு நீங்க அடுத்த வருடம் தான் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரியான நேரத்தில் அனுப்பவும். உதவிகள் வேண்டுமெனில் இணைய குழுவிடம் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாடு அரசின் இலவச பாடபுத்தகங்கள்:

மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டு
மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு


பிளஸ் 2 மாணவர்களுக்கான அறிவுரைகள் -

பிளஸ் 2 மாணவர்கள் எவ்வாறு படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆசிரியர்கள் விளக்கினார்.

தங்கமணி (தமிழ், பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி, கோவை): தமிழில் தற்போது 199 மதிப்பெண் வரை சர்வ சாதாரணமாக வழங்கப்படுகிறது. வகுப்பில் தமிழ் பாடம் நடத்தும்போது, மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்யக் கூடாது. தமிழ் தானே என அலட்சியமாக இருக்கக்கூடாது.

தமிழில் அதிக மதிப்பெண் பெற, எழுத்து பிழையின்றி எழுத வேண்டும். கேள்விக்கு சம்மந்தம் இல்லாத பதில், கதைகளை எழுதக்கூடாது. தெளிவான கையெழுத்தில் தேர்வு எழுத வேண்டும்.

விடைத்தாளில் அடிக்கோடு இட,  பச்சை மை, சிவப்பு மை, ஊதா மை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. இந்த மைகள், பேப்பர்களை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் பயன்படுத்தக் கூடியவை. திணைக்கு நேரிடையாக வினா எழுத வேண்டும். மனப்பாடம் பகுதி எழுதும்போது பாட்டு எழுத வேண்டும். பாவகை எழுதி விடக்கூடாது. எந்தந்த இடங்களில் கமா, புல் ஸ்டாப் வைக்க வேண்டும் என தெரிந்து, சரியாக வைக்க வேண்டும். அதை செய்ய தவறினால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

அதிக மதிப்பெண் பெற, படித்ததை அடிக்கடி திருப்பி பார்க்க வேண்டும். துணைப்பாடத்தில் முதல் ஐந்து பாடங்களை நன்றாக படிக்க வேண்டும் அல்லது ஐந்தாம் பாடத்தில் இருந்து 10ம் பாடம் வரை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதி முடித்ததும் அவற்றை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். வினா எண் சரியாக எழுதி இருக்கிறோமா என சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

அதிகாலை சீக்கிரம் எழுந்து படிப்பது மிகவும் நல்லது; அப்போது, அவை மனதில் எளிதில் பதியும்.

சாந்தா (ஆங்கிலம், பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி, கோவை): ஆங்கிலம் கசப்பான பாடம் இல்லை. விரும்பி படித்தால் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெறலாம். வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகவும் கவனமாக கேட்க வேண்டும். பாடத்தில் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஆசிரியரிடம் கேட்டு, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தேகத்தை கேட்டால் சக மாணவ, மாணவியர் நம்மை தவறாக, கேலியாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் கொள்ளக் கூடாது. இலக்கண பிழைகள் இருந்தால் மதிப்பெண் குறையும். இதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெர்சனல் டாபிக், மை ஆம்பிசன், அறிவியல் மற்றும்  அணு குறித்து கேள்விகள் கேட்கப்படும். இதற்கு நம்மை செம்மையாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. தேர்வுக்கு நன்றாக படித்து விட்டுச் செல்ல வேண்டும். விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களை கவரும் வகையில் பாயின்ட், பாயின்டாக சரியாக  எழுத வேண்டும். 11 முதல் 38 வரையுள்ள வினாக்கள் மிக அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய பகுதி. நூலகம் குறித்து அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதை மாணவர்கள் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.

கேள்விக்கு பதில் எழுதும் முன் கேள்விகளை நன்றாக படித்து பார்த்துக் கொள்ள வேண்டும். கேள்விக்கு சரியான பதிலை தான் எழுதுகிறோமா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். கேள்விக்கு சம்மந்தம் இல்லாத பதில்களை எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினால், திருத்தும் ஆசிரியர்களுக்கு நம் மீதுள்ள நல்ல நம்பிக்கை போய்விடும். அடிக்கோடு இடுவதற்கு கருப்பு, புளுமை பேனாக்களை பயன்படுத்தலாம். வினாத்தாளில் அதிகம் அலங்காரம் செய்ய வேண்டாம்.

மனப்பாடம் செய்ய வேண்டியவைகளை மட்டுமே மனப்பாடம் செய்ய வேண்டும், பிறவற்றை படித்து புரிந்துக் கொள்ள வேண்டும். இந்நடை முறைகளை கையாண்டால் ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்  பெறுவது உறுதிComments