சேர்க்கைக்கு தயாராதல்


நீங்கள், இளநிலைப் பொறியியல் படிப்பை ஏதேனும் ஒரு வெளிநாட்டுப் பல்கலையில் மேற்கொள்ள விரும்பினால், அதற்கான தேர்வுசெய்தல் செயல்பாட்டை பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கிவிட வேண்டும். 12ம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே அந்த நிலையில் நீங்கள் 11ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அதிக முக்கியத்துவம் பெறும். எனவே, 11ம் வகுப்பு தேர்வை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதன் மதிப்பெண்கள்தான், இதுபோன்ற சூழல்களில் உங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன.

ஒரு வெளிநாட்டு பல்கலையை தேர்வுசெய்யும் முன்பாக,

                            * உங்களின் எதிர்கால லட்சியத்திற்கும், பாடத்திட்டத்திற்கும் உள்ள தொடர்பு

                            * குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம்

                            * செலவினங்கள்

                            * படிப்பின் காலஅளவு

                            * படிப்பிற்கு பிறகான வேலை வாய்ப்புகள்

போன்ற அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில், ஆன்லைன் விண்ணப்ப முறைகள் பிரபலமாகிவிட்டதால், வெளிநாட்டு பல்கலைகளில் விண்ணப்பித்தல் எளிதான காரியமாக உள்ளது. ஏறக்குறைய அனைத்து பல்கலைகளுமே, விண்ணப்பதாரரின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்கள், ஆசிரியர்களிடமிருந்து பெற்ற பரிந்துரைக் கடிதங்கள், தனிப்பட்ட அறிக்கைகள் மற்றும் நிதிநிலை ஆதாரங்கள் போன்றவைகளையே எதிர்பார்க்கின்றன.

விண்ணப்பிக்கும் முன்பாக, சம்பந்தப்பட்ட பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அலசி ஆராய்வது நல்லது.

தற்போது, சில பிரதான நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சேர்க்கை நடைமுறைகள் பற்றி அலசலாம்.

Comments