எக்ஸ்.ஏ.டி. தேர்வு

மேனேஜ்மென்ட் படிப்பிற்காக அகில இந்திய அளவில் எக்ஸ்.எல்.ஆர்.ஐ. நடத்தும் நுழைவுத் தேர்வுதான் எக்ஸ்.ஏ.டி. 70க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் எக்ஸ்.ஏ.டி. தேர்வு முடிவை தங்களது மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. சுமார் 33 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தகவல் புத்தகமும், விண்ணப்பமும், 900 ரூபாயாகும். சில முக்கிய கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வு முடிவை ஏற்றுக் கொள்கின்றன.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை : 3 பிரிவுகளைக் கொண்டதாக இந்த தேர்வு உள்ளது. இந்த தேர்விற்கு 2 மணி நேரம் அளிக்கப்படுகிறது. தேர்வு முடிந்ததும் 20 நிமிடங்களில் ஒரு கட்டுரை எழுத வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஏதேனும் 3 பாடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். அதிக பாடங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நேர்முகத் தேர்வு / குழு கலந்துரையாடலுக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தேர்வு முறையும், கட்-ஆப் மதிப்பெண்களும் மாறுபடும்.


Comments