எய்ம்ஸ் தேர்வு


ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஏஐஐஎம்எஸ்) மருத்துவத் துறையில் பெரும்பங்கு ஆற்றி வரும் கல்வி நிறுவனமாகும். மருத்துவ உலகில் வரும் புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் வகையில் மாணவர்களை மருத்துவத் துறையில் நன்கு திறன் பெற்றவர்களாக உருவாக்குவதையே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் எம்.டி., எம்.எஸ்., எம்.சிஎச்., எம்.டி.எஸ். படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வினை நடத்துகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் மட்டுமே இந்த நுழைவுத் தேர்வை எழுத முடியும். எம்.டி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்கள் பி.டி.எஸ். முடித்திருக்க வேண்டும்.

பாடப்பிரிவு
எம்.பி.பி.எஸ்./பி.டி.எஸ். படிப்பில் கற்பிக்கப்பட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளில் இருந்தும் நுழைவுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு முறை
200 கேள்விகளைக் கொண்ட வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்படும். சரியான பதிலை தேர்வு செய்து அளிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். தேர்வுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்படும். ஒரு தவறான பதிலுக்கு முக்கால் மதிப்பெண் வழங்கப்படும். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எம்.டி.எஸ். படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான வினாத்தாள் 90 சரியான பதிலை தேர்வு செய்து எழுதும் வகையிலான கேள்விகள் அமைந்திருக்கும். இதற்கு ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் முக்கால் மதிப்பெண் வழங்கப்படும்.

நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே அனைத்து முதுகலை பட்டப்படிப்பிலும் மாணவ சேர்க்கை நடைபெறும்.

Comments