வெளிநாட்டு மேற்கல்வி


ஒரு மாணவர் வெளிநாட்டிற்கு சென்று பொறியியல் படிப்பை மேற்கொள்ள நினைப்பதற்கு பலவித காரணங்கள் உள்ளன. பொதுவாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகள், குறிப்பிட்ட துறையில் ஏற்பட்டிருக்கும் புதிய கண்டுபிடிப்புகளை கல்வியில் அறிமுகப்படுத்துவதுடன், விரிவான ஆராய்ச்சி வாய்ப்புகளையும் வழங்குகின்றன. சமீபகாலமாக, ஆசிய நாடுகளான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும், அனுபவரீதியிலான கல்வி, சர்வதேச அணுகுமுறை மற்றும் சிறப்பான வேலை வாய்ப்புகள் போன்றவற்றால், பொறியியல் படிப்புகளுக்கு இந்த நாடுகளும் பெயர்பெற்று விளங்குகின்றன. சர்வதேச கல்வியின் முக்கியத்துவத்தை, உலகளாவிய நிறுவனங்கள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் விரும்பிய பொறியியல் கல்லூரிகள் கிடைக்காத காரணத்தாலும், வெளிநாட்டுப் பல்கலைகளில் படிக்க பலர் விரும்புகின்றனர்.


கணக்கிலடங்காத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, நியூசிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகளில் எங்கே செல்வது என்ற குழப்பம் ஏற்படும். பல சர்வதேச கல்வி நிறுவனங்கள், கல்வி தொடர்பான உலகளாவிய ஒத்துழைப்புகளையும் வைத்துள்ளன. நீண்டகால திட்டங்கள், வேலைவாய்ப்புகள், கற்பித்தல் மொழிகள், அணுகல் வசதிகள், செலவினங்கள் போன்ற பல விஷயங்களை கவனத்தில் கொண்டே ஒரு மாணவர், வெளிநாட்டுக் கல்வித் தொடர்பான முடிவை எடுக்க வேண்டியுள்ளது.


அமெரிக்கா


Comments